12 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை மகிளா கோர்ட்டு தீர்ப்பு

பரமத்தி வேலூர் அருகே 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2017-12-20 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் குமார் (வயது 30). கூலித்தொழிலாளி.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி இரவு, அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவியான 12 வயது சிறுமியை தூங்கிக் கொண்டிருந்தபோது பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

7 ஆண்டுகள் சிறைதண்டனை

இது தொடர்பாக பரமத்திவேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்

இந்த வழக்கு நாமக்கல் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோ, குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். 

மேலும் செய்திகள்