வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகையை பறித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில்
செங்கோட்டை அருகே, நள்ளிரவில் வீடுபுகுந்து, கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகையை பறித்தவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தென்காசி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தென்காசி,

வீட்டுக்குள் புகுந்து சங்கிலி பறிப்பு
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 4.2.2013 அன்று வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்தார். அப்போது அவரது மனைவி ஸ்ரீமதி, முருகனின் தாயார் மற்றும் குழந்தை ஆகியோர் வீட்டில் இருந்தனர். அன்று நள்ளிரவு 2 மணியளவில் அனைவரும் உறங்கிக்கொண்டு இருந்தனர்.
அப்போது செங்கோட்டை விஸ்வநாதபுரம், ராஜூ நகரை சேர்ந்த ராஜப்பா மகன் முருகேசன் (வயது 29) என்பவர், முருகனின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தார். சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீமதி உள்ளிட்ட 3 பேரும் விழித்தனர். உடனே முருகேசன் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ஸ்ரீமதி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார். சங்கிலியின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
10 ஆண்டு ஜெயில்
இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு தென்காசி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி திருவேங்கட சீனிவாசன் இந்த வழக்கை விசாரித்து, முருகேசனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1,500 அபராதமும், அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 1 மாதம் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ராமச்சந்திரன் ஆஜரானார்.