அஞ்சுகிராமம் அருகே பரிதாபம் பிளஸ்–2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
அஞ்சுகிராமம் அருகே பிளஸ்–2 மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
அஞ்சுகிராமம்,
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் தூத்துக்குடியில் ரெயில்வே போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். அவருடைய மகள் பவ்யா (வயது 17). பிளஸ்–2 படித்து வந்தார்.
அப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளியில் தேர்வு நடைபெறுவதால் மகளை திருவிழாவுக்கு செல்ல வேண்டாம் என்று பெற்றோர் கூறியதாக தெரிகிறது.
இந்தநிலையில் திருவிழாவையொட்டி நேற்றுமுன்தினம் இரவு சாமி வாகன பவனி நடந்தது. வீட்டின் வாசலில் சாமி வாகன பவனி வந்தபோது பவ்யாவின் பெற்றோர் சென்று பூஜை செய்தனர். அப்போது, படுக்கை அறையின் கதவை பூட்டிவிட்டு பவ்யா தூக்குப்போட்டு கொண்டார்.
பூஜை முடிந்ததும் திரும்பி வந்த பெற்றோர், படுக்கை அறை பூட்டியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பவ்யா தூக்கில் தொங்கியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்த போது, பவ்யா ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுபற்றி அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.