வேலைவாய்ப்பு அழைப்பு உங்களுக்குத்தான்

ஆந்திர மாநிலம் குண்டூரில் ராணுவத்தின் ஆட்தேர்வு முகாம் நடைபெற உள்ளது.

Update: 2017-12-20 05:19 GMT
ராணுவ வீரர் சேர்க்கை : ஆந்திர மாநிலம் குண்டூரில் ராணுவத்தின் ஆட்தேர்வு முகாம் நடைபெற உள்ளது. படைவீரர், தொழில்நுட்பனர், படைவீரர் (பொதுப் பணி), டிரேட்ஸ்மேன் போன்ற பணிகளுக்கு இந்த ஆட்சேர்க்கை முகாமில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் (மதபோதகர்) பணிக்கு விண்ணப்பித்திருந்தால் இதற்கான முகாமில் கலந்து கொள்ளலாம். படைவீரர் பணிக்கு சேர விரும்புபவர்கள் 18-12-2017-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்து தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். இவர்கள் 13-1-2018 அன்று கடப்பாவில் நடைபெறும் ராணுவ ஆட்சேர்க்கை முகாமில் கலந்து கொள்ளலாம். இது பற்றிய விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

யூ.பி.எஸ்.சி. : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி. உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், பேராசிரியர், ஸ்பெஷலிஸ்ட் போன்ற பணிகளுக்கு 23 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பி.இ., ஜியோகிராபி, ஜியோபிசிக்ஸ், எம்.பி.பி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பு, மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 28-12-2017-ந் தேதி.

இர்கான்:
இந்திய ரெயில்வேயின் கட்டுமான பணிகளை கவனிக்கும் துணை நிறுவனமான இர்கானில் தற்போது சீனியர் திட்ட பொறியாளர் (சிவில்) திட்ட பொறியாளர், துணைத்திட்டப் பொறியாளர் போன்ற பணிக்கு 19 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில் என்ஜினீயரிங் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 31-12-2017-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை www.ircon.org என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

மும்பை துறைமுகம் : மும்பை துறைமுகத்தில் தற்போது டைப்பிஸ்ட் மற்றும் கம்ப்யூட்டர் கிளார்க் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 20 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிளஸ்-2 படித்த, 25 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் www.mumbaiport.gov.in என்ற இணைய தளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 22-12-2017-ந் தேதியாகும்.

மேலும் செய்திகள்