கப்பல் தளத்தில் பயிற்சிப் பணி

இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பழுதுபார்க்கும் பணி மனை ஒன்று மும்பையில் செயல்படுகிறது.

Update: 2017-12-20 04:58 GMT
இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் பழுதுபார்க்கும் பணி மனை ஒன்று மும்பையில் செயல்படுகிறது. ‘நேவல் டாக்யார்டு-மும்பை’ எனப்படும் இந்த கப்பல் தளத்தில் தற்போது ‘அப்ரண்டிஸ்’ (பயிற்சிப்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 180 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பிட்டர், மெஷினிஸ்ட், ஷீட் மெட்டல் ஒர்க் கர், வெல்டர், பிளம்பர், மாசன், மெக்கானிக், மெஷின் டூல் மெயின்டனன்ஸ், மெக்கானிக் டீசல், டெயிலர், பெயிண்டர், பவர் எலக்ட்ரீசியன், ஷிப்ரைட், பைப் பிட்டர், ரிக்கர், கிரேன் ஆபரேட்டர் உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பிரிவுக்கான காலியிட எண்ணிக்கை விவரத்தை இணைய தளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு 1-4-1997 மற்றும் 31-3-2004 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

8 மற்றும் 10-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று, பணிகள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார் கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 2-1-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.bhartiseva.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்