அசாம் ரைபிள் படைப்பிரிவில் 754 பணிகள்

அசாம் ரைபிள் படைப்பிரிவில் 754 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2017-12-20 04:49 GMT
டிப்ளமோ படிப்பு தகுதி

இது பற்றிய விவரம் வருமாறு:-

மத்திய துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று அசாம் ரைபிள். இதன் தலைமை இயக்குனரகத்தில் இருந்து டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 754 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கார்பெண்டர், டெயிலர், சலவைக்காரர், சமையல்காரர், எலக்ட்ரிக்கல் பிட்டர், முடி திருத்துபவர் உள்ளிட்ட டிரேட்ஸ்மேன் பணியிடங்களும், ஸ்டாப் நர்ஸ், கிளார்க், பெர்சனல் அசிஸ்டன்ட், ஆர்மோரர், ஆர்டிபீசர், பிளம்பர், ஆபரேசன் தியேட்டர் உதவியாளர், பார்மசிஸ்ட், வெட்னரி உதவியாளர் போன்ற டெக்னிக்கல் பணியிடங்களும் உள்ளன. இதில் அதிகபட்சம் சமையல்காரர் பணிக்கு மட்டும் 169 பேரும், சலவைக்காரர் 40, முடி திருத்துனர் 45, எக்ஸ்ரே அசிஸ்டன்ட் 43 பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 28 வயதுக்கு உட்பட்டவர்களுக்குப் பணிகள் உள்ளன. அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப் படுகிறது.

கல்வித்தகுதி:

பிளஸ்-2 படித்தவர்கள், பிளஸ்-2 படிப்புடன், தட்டச்சு படித்தவர்கள், ஸ்டெனோகிராபி தேர்ச்சி பெற்றவர்கள், ரேடியோ அண்ட் டெலிவிஷன் டெக்னாலஜி, எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், டொமஸ்டிக் அப்ளையன்சஸ் போன்ற டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வு செய்யும் முறை:


சான்றிதழ் சரிபார்த்தல், உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் அந்தந்த பணிக்கு அவசியமான தேர்வு முறைகள் பின்பற்றப்பட்டு தகுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். அதில் முன்னிலை பெறுபவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஆப்லைன் (தபால்) மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி நாள் 20-12-2017-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.assamrifles.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்