அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் லாஸ்பேட்டை மற்றும் காலாப்பட்டு தொகுதிக்குழு சார்பில் லாஸ்பேட்டை அய்யனார் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-12-19 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தை முழுநேர மருத்துவமனையாக மாற்றவேண்டும், லாஸ்பேட்டை மற்றும் காலாப்பட்டு தொகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தினை விரைந்து முடிக்கவேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் லாஸ்பேட்டை மற்றும் காலாப்பட்டு தொகுதிக்குழு சார்பில் லாஸ்பேட்டை அய்யனார் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தொகுதி செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், துணை செயலாளர்கள் ராமமூர்த்தி, சலீம், பொருளாளர் அபிசேம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சபாநாயகம், செல்வராசு, வீரக்குமார், தனசேகரன், கலியபெருமாள், கருணாஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்