பிளாஸ்டிக் மின்கம்பங்கள் நிறுவியதில் முறைகேடா? பழைய துறைமுக பகுதியில் அன்பழகன் எம்.எல்.ஏ. ஆய்வு

புதுவை உப்பளம் தொகுதி பழைய துறைமுக பகுதியில் பிளாஸ்டிக் மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்குகள் பொறுத்தும் பணி நடந்து வருகிறது.

Update: 2017-12-19 22:45 GMT

புதுச்சேரி,

புதுவை உப்பளம் தொகுதி பழைய துறைமுக பகுதியில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பிளாஸ்டிக் மின் கம்பங்கள் அமைத்து மின் விளக்குகள் பொறுத்தும் பணி நடந்து வருகிறது. 26 பிளாஸ்டிக் மின் கம்பங்கள் அமைக்க டெண்டர் விடப்படாமல் ரூ.19 லட்சம் செலவில் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அன்பழகன் எம்.எல்.ஏ.வுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவர் நேற்று துறைமுக பகுதியில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அப்போது மின்கம்பங்கள் குறித்து அதிகாரிகளிடம் அன்பழகன் எம்.எல்.ஏ. விளக்கம் கேட்டார்.

மேலும் செய்திகள்