பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி சிக்கியது
கும்மிடிப்பூண்டியில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி சிக்கியது.;
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தபால் தெருவில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று தாசில்தார் ராஜகோபால் தலைமையில் மண்டல துணை தாசில்தார் தாமோதரன், வட்டவழங்கல் அதிகாரி செல்வகுமார், வருவாய் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.
அங்குள்ள ஒரு வீட்டில் 4½ டன் எடை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தவர்கள் யார்? அவை கும்மிடிப்பூண்டியில் உள்ள எந்த ரேஷன் கடைகளில் இருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து தாலுகா அலுவலகத்தினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியிருப்புகளின் மத்தியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருவாய்த்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.