மீன்சுருட்டி அருகே திருட்டுபோன அம்மன் சிலை கரும்பு தோட்டத்தில் கிடந்தது
மீன்சுருட்டி அருகே கோவிலில் திருட்டுபோன அம்மன் சிலை கரும்பு தோட்டத்தில் கிடந்தது. அந்த சிலையை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள மேலணிக்குழி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (வயது 62) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி இரவு வழக்கம்போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அப்போது கோவிலின் பூட்டை உடைத்து கர்ப்ப கிரகத்தில் இருந்த 1½ அடி உயரமுள்ள 25 கிலோ எடை கொண்ட பித்தளை அம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
கரும்பு தோட்டத்தில் கிடந்தது
இதுகுறித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது கரும்பு தோட்டத்தில் நேற்று மாலை திருட்டு போன அம்மன் சிலை கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி, இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், வேலுச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிலையை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிலை மேலணிக்குழி கிராமத்தில் திருட்டு போன அம்மன் சிலை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.