மாற்று கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் உறுதிமொழி கொடுக்க மாட்டோம் எடியூரப்பா பேட்டி
மாற்று கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் உறுதிமொழி கொடுக்க மாட்டோம் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
மாற்று கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் உறுதிமொழி கொடுக்க மாட்டோம் என்று எடியூரப்பா கூறினார்.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கொப்பலில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
நாங்கள் தயாராக உள்ளோம்பா.ஜனதாவில் சேர விரும்பும் மாற்று கட்சியினரை வரவேற்க நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் யாராக இருந்தாலும் சரி மாற்று கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு டிக்கெட் உறுதிமொழி கொடுக்க மாட்டோம். எங்கள் கட்சியின் கொள்கைகளை ஏற்று வருபவர்கள் வரலாம். எங்கள் கட்சி, தொண்டர்களை அடிப்படையாக கொண்ட கட்சி. வேட்பாளர்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால் யாருக்கும் டிக்கெட் உறுதிமொழி கொடுக்க மாட்டோம்.
மாநிலத்தில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 5 முதல் 10 பேர் வரை டிக்கெட் கேட்கிறார்கள். குஜராத், இமாசலபிரதேசத்தில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்த தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. கர்நாடக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
மக்கள் தயாராகிவிட்டனர்ஆட்சி பீடத்தில் இருந்து காங்கிரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். அதனால் ‘மிஷன்–150’ அதாவது 150 தொகுதிகளில் வெற்றி பெறுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 2 மாநிலங்களின் வெற்றி கர்நாடக பா.ஜனதா தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை தந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில் மாற்றத்திற்கான பயண கூட்டங்களை இன்னும் சிறப்பாக நடத்த நாங்கள் முடிவு எடுத்துள்ளோம்.
இந்த பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் முதல்–மந்திரி சித்தராமையா மற்றும் காங்கிரஸ் கட்சி எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறது. எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதில் உண்மை இல்லை. நான் நன்றாக உள்ளேன். இந்த பொய்யான தகவலை யாரும் நம்ப வேண்டாம்.
பொய் தகவல்களை...எதற்காக இந்த பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இறைவனின் ஆசி மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளால் நான் உடல் ஆரோக்கியத்துடன் நன்றாக உள்ளேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.