மேலூரில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யூ சார்பில் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-12-19 22:00 GMT

மேலூர்,

தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் சி.ஐ.டி.யூ சார்பில் மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் சிவாஜி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட தலைவர் அரவிந்தன், பொருளாளர் சவுந்தரராஜன், நிர்வாகிகள் மணவாளன், அய்யணபிள்ளை, ஷாஜகான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆட்டோ தொழிலில் பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷமிட்டனர். தமிழகத்தில் தற்போது படித்த பல லட்சம் வாலிபர்களுக்கு வேலைவாய்ப்பளித்து வருகிறது. இந்தநிலையில் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், இந்த தொழிலில் பன்னாட்டு நிறுவங்கள் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் அனுமதிப்பதை கண்டித்து அனைவரும் பேசினர்.

இதேபோல வாடிப்பட்டி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்ககோரி தாலுகாஅலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய துணைச் செயலாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் பெத்தனசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜோதிராமலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பரமசிவம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்