தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சையில் தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-19 22:45 GMT

தஞ்சாவூர்,

அனைத்திந்திய தபால் ஊழியர்கள் சங்கம் மற்றும் தேசிய தபால் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர்கள் பஞ்சநாதன், அய்யாக்கண்ணு ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் கோட்ட தலைவர் மாரிமுத்து, மண்டல செயலாளர் இதயநாதன், கிளை செயலாளர்கள் மதியழகன், கார்த்திகேயன், கிளை தலைவர் மதியழகன், நிர்வாகிகள் செல்வகுமார், தசரதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் வளர்ந்த நாடுகளில் கூட தபால் சேவைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படவில்லை. ஆனால் இந்தியாவில் மட்டும் தபால் சேவையில் விரைவுதபால், பார்சல் உள்ளிட்டவற்றை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பது மிகவும் பிற்போக்குத்தனமான செயலாகும். மக்கள் சேவையினை சீர்குலைத்து ஊழியர்கள் நலனை கேள்விக்குறியாக்கும் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்