தஞ்சையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, மாநில மகளிரணி குழு உறுப்பினர் செல்வி, தமிழ்நாடு கோவில் நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சம்பத்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், கோதண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சியில் பெண் அலுவலக உதவியாளருக்கு சூடுவைத்த நீதிபதியின் தாயார் மீதும், நீதிபதியின் மீதும் மனித உரிமை மீறல் வழக்கும், குற்ற வழக்கும் தொடர வலியுறுத்தியும், அலுவலக உதவியாளர்களை அலுவலக வேலைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.