ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-12-19 22:15 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் ஆகியவை சார்பில் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த வேண்டும், வாகனம் ஓட்ட தெரிந்த அனைவருக்கும் பேட்ஜ் வழங்கிட வேண்டும், வாகனங்களுக்கான வேக கட்டுப்பாட்டு கருவியை அரசே இலவசமாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் வீரசதானந்தம், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் கணேசன் பேசினார். ராஜபாளையம் நகர சி.ஐ.டி.யு. கன்வீனர் சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் திருமலை, கோவிந்தராஜ், கிருஷ்ணன்கோவில் ஆட்டோ சங்க செயலாளர் கனகராஜ், வத்திராயிருப்பு ஆட்டோ சங்கத்தை சேர்ந்த பூங்காவனம், சத்திரப்பட்டி சங்க செயலாளர் மாடசாமி, முறம்பு டாக்சி சங்கத்தலைவர் பூசத்துரை, செட்டியார்பட்டி சங்கத்தலைவர் சேவுகபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் டாக்சி சங்கத்தலைவர் பழனிமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்