புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மருத்துவ செலவினத்தை குறைக்க முடியும்
புதிய தொழில்நுட்பம் கண்டுபிடித்த வி.ஐ.டி. மாணவருக்கு நடந்த பாராட்டு விழாவில் ‘புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மருத்துவ செலவினத்தை குறைக்க முடியும்’ என்று வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பேசினார்.
வேலூர்,
இங்கிலாந்து நாட்டின் லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் இன்ஸ்டியூசன் ஆப் என்ஜினீயரிங் அண்டு டெக்னாலஜி (ஐ.ஈ.டி.) என்ற அமைப்பு 18 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட பொறியியல் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் இளம் ஆராய்ச்சியாளர்களிடையே ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு திறனை வளர்க்கும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளை நடத்தி வருகிறது.
அதன்படி புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி பல்கலைக்கழக அளவில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திலும், மண்டல அளவிலான போட்டி சென்னையிலும் நடந்தது. அதில் வேலூர் வி.ஐ.டி. 3-ம் ஆண்டு பி.டெக். மாணவர் சுபம் ஷராப் முதலிடம் பிடித்தார்.
அவர் தனது கண்டுபிடிப்பான, பேச்சுத்திறன் குறைந்த திக்கி, திக்கி, பேசுபவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் நரம்பு மண்டலத்தை தூண்டும் மிரர் நியுரான்ஸ் என்ற புதிய தொழில்நுட்ப செயலி (ஆப்ஸ்) கண்டுபிடித்தார்.
இதன்மூலம் திக்கி, திக்கி பேசுபவர்களின் பேச்சுத்திறனை அதிகரிக்க உதவும். மேலும் டயாபடீஸ் நோயாளிகளின் உடலில் உள்ள சர்க்கரை அளவை அந்த செயலி மூலம் கண்டறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரையை மாணவர் சுபம் ஷராப் பெங்களூருவில் நடந்த ஆசிய அளவிலான ஆராய்ச்சி போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். அவருக்கு ரூ.40 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் லண்டனில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். அவருக்கு ரூ.85 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது.
அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா வி.ஐ.டி.யில் நேற்று நடந்தது. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் தலைமை தாங்கினார். இந்திய பிரிவு தலைவர் ராகவன், ஐ.ஈ.டி. பிரதிநிதிகள் கபில்கண்ணா, பேராசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை துணைவேந்தர் நாராயணன் வாழ்த்தி பேசினார். மாணவர் அமைப்பு தலைவர் அமன்தீப் வரவேற்றார்.
துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மாணவரை பாராட்டி பேசியதாவது:-
இன்று ஐ.ஈ.டி. அமைப்பு மாணவர்கள் ஆசிரியர்களிடையே உள்ள அறிவு, திறமை ஆகியவற்றை வெளிக்கொண்டு வரும் வகையில் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது. இது மாணவர்களிடையே அறிவு வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் இல்லை என்றால் எதுவும் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது.
மருத்துவத்தில் ‘ரோபோ’ மூலமாக அறுவை சிகிச்சை செய்யும் தொழில்நுட்பம் வந்துள்ளது. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் மருத்துவ சிகிச்சை செலவினத்தை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவர் சுபம் ஷராப்பை பாராட்டி பரிசும், விருதும் வழங்கப்பட்டது.