ஒகி புயலில் வாழைகள் நாசமானதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

ஒகி புயலில் வாழைகள் நாசமானதால் மனமுடைந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2017-12-18 23:00 GMT
பூதப்பாண்டி,

பூதப்பாண்டி அருகே உள்ள தெரிசனங்கோப்பை அடுத்த தெள்ளாந்தி கலைஞர் நகரை சேர்ந்தவர் மாடசாமி(வயது 80), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் வாழை பயிர் செய்திருந்தார்.

கடந்த 29-ந்தேதி வீசிய ஒகி புயலில், மாடசாமி பயிர் செய்திருந்த வாழைகள் அனைத்தும் நாசமானது. இதனால் அவர், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். மேலும், இதுகுறித்து தனது குடும்பத்தாரிடமும் வருத்தப்பட்டு பேசிவந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாடசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்