கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூ.39 லட்சம் மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது

திருக்கடையூரில் உள்ள ஒரு வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.39 லட்சம் மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-18 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் திருக்கடையூர் மேலவீதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது40). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இவர் கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டதாக வங்கியின் மேலாளர் கபாலீஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வங்கியின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் பாலாஜி கவரிங் நகைகளை வங்கியில் அடகு வைத்ததன் மூலம் ரூ.39 லட்சத்து 46 ஆயிரத்து 206 மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் கபாலீஸ்வரன், நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

கைது

புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 கார்கள், ஒரு வேன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்