பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காமல் கிராமம் புறக்கணிப்பு தஞ்சை கலெக்டரிடம் விவசாயிகள் புகார்
பயிர்க்காப்பீட்டு தொகை வழங்காமல் கிராமம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தஞ்சை கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகளை கோரிக்கை மனுக்களாக கொடுத்தனர்.
தஞ்சையை அடுத்த தென்பெரம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர், ராயந்தூர், சித்தாவயல், கனவெளி, சீராளூர், தென்பெரம்பூர் உள்ளிட்ட 9 கிராம விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கள்ளப்பெரம்பூர் சுற்றுச்சாலை அருகே சாலைமறியலில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிபேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வேளாண்மைத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து 9 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் டிசம்பர் 5-ந்தேதிக்குள் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தென்பெரம்பூர் கிராமத்திற்கு மட்டும் இதுவரை வழங்கப்படவில்லை. அந்த கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீட்டுத்தொகை வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே இழப்பீட்டுத்தொகையை உடனே பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் தலைமையில் விவசாயிகள் கொடுத்த மனுவில், “விவசாயிகளின் இடைவிடாத கோரிக்கைக்கு செவிசாய்த்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை பெற்றுத்தரும் கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். அதே வேளையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவசாயிகள் பெற்ற கடனுக்காக, பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகையை வரவு வைக்கிறார்கள். அவ்வாறு வரவு வைக்கக்கூடாது எனவும், மேலும் விவசாயகளிடம் ந்தவித தொகையும் பெறக்கூடாது என தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.