புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
பொன்னன்விடுதி கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.
கூட்டத்தில் கீரனூர் அருகே உள்ள குளத்தூர் தாலுகா வடக்கு பாறைப்பட்டி என்ற கருப்புடையான்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கல்குவாரியானது அரசினால் டெண்டர் விடப்பட்டு நடைபெற்று வந்தது. தற்போது கல்குவாரியின் டெண்டர் முடிந்து விட்டது. ஆனால் டெண்டர் எடுத்தவர்கள் தொடர்ந்து கல்குவாரியை சட்டத்திற்கு விரோதமாக நடத்தி வருகின்றனர். இது குறித்து குளத்தூர் தாசில்தார் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து டெண்டர் முடிந்தும் தொடர்ந்து கல்குவாரி செயல்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னான் விடுதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடைபெற்று வருகிறது. தற்போது ஒரு இடத்தில் புதிதாக கடை கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் இன்னும் சில நாட்களுக்குள் டாஸ்மாக் கடை செயல்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
தொடர்ந்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் கணேஷ் நடவடிக்கை எடுப் பதாக கூறினார்.