காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-18 22:30 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அடுத்த ஒலிமுகமதுபேட்டை பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சிவகாஞ்சீ போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் துளசி மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய சிறுகாவேரிபாக்கத்தைச் சேர்ந்த சரவணன்(வயது 31), பெரிய காஞ்சீபுரத்தைச் சேர்ந்த லோகேஷ்(28), சிலம்பரசன்(28), பாலாஜி(25), வாலாஜாபாத்தை சேர்ந்த அலிபாஷா(42) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதேபோல் செங்கல்பட்டு டவுன் சப்–இன்ஸ்பெக்டர் மங்களபிரியா மற்றும் போலீசார் ரெயில்வே பாலம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த செங்கல்பட்டை சேர்ந்த ரமேஷ்(46), குமார்(37), சந்திரன்(34), மேலமையூரைச் சேர்ந்த ஆராமுதன்(50) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் பஸ் டெப்போ அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த மேல மையூரைச் சேர்ந்த அலெக்சாண்டர் (48), நிவாஸ்(30), வல்லத்தைச் சேர்ந்த குமார்(52), அனுமந்தபுத்தேரியை சேர்ந்த கண்ணன்(40), மனப்பாக்கத்தை சேர்ந்த திலகா(34) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்