ஆயுதப்படை போலீஸ் பிரிவில் நெல்லை சரக டி.ஐ.ஜி ஆய்வு
தூத்துக்குடி ஆயுதப்படை போலீஸ் பிரிவில் நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் ஆய்வு செய்தார்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் பிரிவு மில்லர்புரத்தில் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கர் ஆய்வு மேற்கொண்டார். அவர், ஆயுதப்படை போலீஸ் பிரிவில் உள்ள ஆயுதங்கள் வைப்பறை, பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள், மற்றும் போலீஸ் அதிகாரிகள் வசம் உள்ள போலீஸ் துறை வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.
அதன்பிறகு ஆயுதப்படை மைதானத்தில் நடந்த ஆயுதப்படை போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் அய்யம்பெருமாள், பெர்னாட் சேவியர், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து, வெங்கடேசன், மணிகண்டன், சொர்ணமணி, பெஞ்சமின், வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.