இணைய வழியில் இணைந்த இதயங்கள்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். ஜார்ஜூக்கும்- ஜாஸ்மினுக்கும் மருத்துவமனைதான் சொர்க்கம்.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக சொல்வார்கள். ஜார்ஜூக்கும்- ஜாஸ்மினுக்கும் மருத்துவமனைதான் சொர்க்கம். இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையில் இருக்கும் அவர்கள் இருவரும் இதயங்களை அங்குதான் இணைத்துக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் அன்பை வெளிப்படுத்திக்கொண்ட விதம், ‘ஆஹா இதல்லவா உண்மைக் காதல்..!’ என்று உருகவைக்கிறது.
ஜார்ஜ், ஜாஸ்மின் இருவரும் இரு வேறு இடங்களில் விபத்தில் சிக்கி முதுகெலும்பில் பலத்த அடிபட்டு, மரணத்தோடு போராடி உயிர் பிழைத்தவர்கள். அவர்களது இளம் வயது கனவுகள் அத்தனையையும் காவு வாங்கிவிட்டது அந்த விபத்து. இரு வருக்கும் வலி, அவஸ்தை, எத்தனையோ கஷ்டங்கள். ஒருமுறை விதி அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக அருகருகே உள்ள படுக்கைகளில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. வலியோடு வலியாக பார்வையை பரிமாறியிருக்கிறார்கள். அங்கே அவர்களுக்குள் நேசமும், பாசமும் துளிர்த்திருக்கிறது.
ஜார்ஜ் சொல்கிறார்..!
“எனது சொந்த ஊர் திருவனந்தபுரம். எதிர்காலத்தை பற்றிய ஏகப்பட்ட கனவுகளோடு நான் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அடுத்து எம்.பி.ஏ. படிக்கவேண்டும் என்பது என் மிகப்பெரிய ஆசையாக இருந்தது. எனது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். நான் தான் குடும்பத்தின் மூத்த மகன். படித்து முடித்துவிட்டு அப்பாவை போன்று வெளிநாட்டில் வேலைபார்க்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது.
அன்று காலையில் பெட்ரோல் நிரப்புவதற்காக பைக்கை ஓட்டிக்கொண்டு சென்றேன். வாகனப் போக்குவரத்து ஒன்றும் பெரிய அளவில் இல்லை. நிதானமான வேகத்தில் நான் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு ஆட்டோ வந்துகொண்டிருந்தது. அடுத்து என் மீது ஏதோ வேகமாக மோதியதுபோல் இருந்தது. கண்கள் இருண்டது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். இரண்டு நாட்கள் கழித்து திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி தீவிர சிகிச்சை பிரிவில் நான் கண்விழித்தபோது, அம்மா என் அருகில் பதற்றத்தோடு நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. எனக்கு என்ன ஆனது? என்று கேட்டபோது, அம்மா எல்லாம் சரியாகிவிடும் என்று அழுதகண்களோடு சொன்னார். பின்பு டாக்டர்கள் வந்தபோதுதான் உண்மை தெரிந்தது. என் பைக் மீது ஆட்டோ மோதியிருக்கிறது. நான் நடுரோட்டில் மல்லாந்து விழுந் திருக்கிறேன். என் முது கெலும்பில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, உணர்வு நரம்புகள் செயலிழந்திருக்கின்றன. அதனால் என் இடுப்புக்கு கீழ் பகுதி இனி செயல்படாது. பாத்ரூமுக்கு கூட நான் அடுத்தவர்கள் துணையின்றி செல்ல முடியாது என்றார்கள்” என்று தனது 20-வது வயதில் அதாவது 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த விபத்தை விவரிக் கிறார்.
ஜாஸ்மின் 2004-ம் ஆண்டு ஜூன் மாதம் விபத்தில் சிக்கியிருக்கிறார். அவர் தனது விபத்தை விளக்குகிறார்..!
“நானும், என் தங்கையும் காலையில் கல்லூரிக்கு ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தோம். எதிரே வந்த வாகனத்தில் மோதாமல் இருக்க ஸ்கூட்டரை திருப்பினேன். அப்போது தலையில் அடிபட்டு கீழே விழுந்திருக்கிறேன். அதோடு என் இடுப்புக்கு கீழ் செயல்பாடு இல்லாமல் போய்விட்டது. வீல் சேரிலே என் வாழ்க்கை கடந்தது. எனக்கு வீல் சேரை பார்த்தாலே அலர்ஜியாக இருந்தது..” என்கிறார். இவர் பெங்களூருவை சேர்ந்தவர். அங்குதான் விபத்தில் சிக்கியிருக்கிறார்.
ஜார்ஜூம்- ஜாஸ்மினும் எப்படி சந்தித்தார்கள்?
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவமனை ஒன்று ‘முதுகெலும்புக்குள் செலுத்தப்படும் விசேஷ ஊசி மருந்து உள்ளது. அது முதுகெலும்பில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து, முன்பு போல் இயங்கவைக்கும்’ என்று விளம்பரம் கொடுத்திருக்கிறது. அதை பார்த்துவிட்டு பெங்களூருவில் இருந்து ஜாஸ்மினும், திருவனந்தபுரத்தில் இருந்து ஜார்ஜூம் அந்த மருத்துவ மனைக்கு வந்திருக்கிறார்கள்.
முதல் நாள் ஜாஸ்மினை, ஜார்ஜ் பார்த்திருக்கிறார். மறுநாளும் அவர் கண்கள் ஜாஸ்மினைத் தேடியிருக்கின்றன. 12 நாட்கள் தொடர்ச்சியாக ஊசி மருந்து செலுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஊசி போடும்போது உயிர்போகும் வலியை அனுபவித்திருக்கிறார்கள். கடைசி நாளில் இருவரும் அருகருகே உள்ள படுக்கையில் வலியை தாங்கிக்கொண்டிருந்த நேரத்தில் முதல் முறையாக அவர்கள் மனந்திறந்து பேசியிருக்கிறார்கள்.
வலியை தாங்கிக்கொண்டால் எழுந்து நடந்துவிடலாம் என்ற நம்பிக்கையை கடைசி ஊசி தகர்த்துவிட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்ட உணர்வு அவர்களுக்கு பெருங்கவலையை அளித்திருக்கிறது. ஆனாலும் புதிதாக கிடைத்த நட்போடு மருத்துவமனையில் இருந்து அவரவர் ஊருக்கு திரும்பியிருக்கிறார்கள். பின்பு இணைய வழியில் அவர்களது இதய பதிவுகள் நடந்திருக்கின்றன. குடும்பத்தினரும் ஒத்துழைத்திருக்கிறார்கள். நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் வீல் சேர் உதவியோடு கணவன், மனைவியாகி வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள்.
“வீல் சேரில் வாழ்பவர்களுக்கு பெரும்பாலும் வெளியே சிறுநீர் பை பொருத்தவேண்டியிருக்கும். முதுகுத்தண்டில் அடிபட்டால் உணர்வுகள் இல்லாமல் போய்விடும். அதனால் மலத்தையும் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் இடுப்புக்கு கீழ் செயலிழந்தவர்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கிக்கொள்கிறார்கள். நாங்கள் 60 சதவீதம் அளவுக்கு பாதிப்புகொண்டவர்கள். அதனால் தொடக்கத்தில் எங்கள் நிலையும் அப்படித்தான் இருந்தது. பின்பு நாங்கள் சிறிது சிறிதாக உடலை எங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டோம். ஒரு கப் தண்ணீர் குடித்தால் அடுத்து எப்போது சிறுநீர் போகவேண்டியதிருக்கும் என்பது தெரிந்துவிடும். இப்போது நாங்கள் இருவரும் டயாபர், யூரின் பேக் எதுவும் இல்லாமல் வாழ்கிறோம்.
நமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, நமது உடலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர கற்றுக்கொண்டால், பழைய வாழ்க்கைக்கு நம்மால் திரும்ப முடியும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இப்போது எங்கள் வேலையை எங்களால் கவனித்துக்கொள்ள முடிகிறது. வீட்டில் மாடிப்படிகளை மாற்றிவிட்டு வீல் சேர் செல்லும் அளவுக்கு சவுகரியப்படுத்தியுள்ளோம். வண்டி ஓட்டுவதை போன்று வீல் சேரை இயக்கி டவுன் வரை சென்று வருகிறோம்.
எனது பெரிய மகிழ்ச்சி, நீச்சல் அடிக்க கற்றுக்கொண்டது. தொடர்ச்சியான பயிற்சி மூலம் கைகளை மட்டும் பயன்படுத்தி நீச்சலடிக்க கற்றுக்கொண்டேன். குளத்தில் நீச்சலடித்தேன். இனி கொச்சி காயலை நீந்திக்கடக்க திட்டமிட்டிருக்கிறேன்..” என்று தன்னம்பிக்கையோடு சொல்கிறார், ஜார்ஜ்.
விபத்தால் கைகளைகூட அசைக்க முடியாத நிலையில் ஜாஸ்மின் இருந்தார். தொடர்ந்து பல்வேறு தெரபிகளை கொடுத்து கைகளை ஓரளவு செயல்படவைத்திருக்கிறார்கள். உடைகளை அவரே மாற்றிக்கொள்கிறார். வாரத்தில் ஒரு நாள் கணவன், மனைவி இருவரும் வெளியே சென்று வருகிறார்கள். வருடத்திற்கு ஒருமுறை வெளியிடங்களுக்கு சுற்றுப்பயணமும் மேற்கொள்கிறார்கள். யானையில் சவாரி செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஆசை இவர்களுக்கு இருந்திருக்கிறது. சவாரி செய்து அந்த ஆசையையும் அரங்கேற்றி மகிழ்ந்திருக்கிறார்கள்.
வாகன போக்குவரத்து துறையோடு இணைந்து, பாதுகாப்பான சாலை பயணத்திற்கான புத்தகம் ஒன்றை இவர்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். அடுத்து, ‘வீல் சேர் வாழ்க்கை என்பது முடிவானதல்ல’ என்பதை உணர்த்தும் விதத்தில், வீல் சேரில் வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
இவர்கள் எண்ணங்கள் ஈடேறட்டும்!