ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயற்சி
திருவானைக்காவலில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. அப்போது வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றார். சிலர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
ஸ்ரீரங்கம்,
திருச்சி மாநகர பகுதிகளில் மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகளும், மக்களும் அவதிப்படுகின்றனர். மேலும் சாலைகளில் மழைநீர் வடியாமல் சாலைகள் சேதம் அடைவதாகவும் புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் பாலக்கரை ரவுண்டானா முதல் காந்திமார்க்கெட் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நேற்று முன் தினம் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையில் இருந்து அம்மாமண்டபம் ரோடு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வீரமணி, வருவாய் ஆய்வாளர் செல்வவிநாயகம் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் திருவானைக்காவல் காந்திரோடு - டிரங்க் ரோடு சந்திப்பில் இருந்து கொள்ளிடம் செக் போஸ்ட் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை நேற்று அகற்றினர்.
அப்போது ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே 2 வீடுகளை அகற்றுவதற்காக மின் இணைப்புகளை துண்டித்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த வீடுகளை இடிக்க முயன்ற போது குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், நாங்கள் கடந்த 25 வருடங்களாக இங்கு குடியிருந்து வருகிறோம், எங்களுக்கு மாற்று இடம் கேட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீட்டை இடிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது ஒரு வீட்டின் உரிமையாளர் பழனியம்மாள் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்த போலீசார் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதியினர் திருவானைக்காவல்- கொள்ளிடம் சாலையில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த 2 வீடுகளையும் இடிக்காமல் அதிகாரிகள் சென்று விட்டனர். தொடர்ந்து திருவானைக்காவல் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள், சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்லும் சறுக்கு பாதைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.