கணவர் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாததால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
கணவர் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லாததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பயணியர் மாளிகை சாலை பகுதியைச் சேர்ந்தவர் காசிம். இவருக்கும் தர்மபுரி ஒட்டப்பட்டியைச் சேர்ந்த சையத் ரகமத்துல்லா என்பவரின் மகள் சிம்மு (வயது22) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காசிம் குவைத் சென்றார். அங்கு அவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சிம்மு தன்னையும் குவைத்திற்கு அழைத்து செல்லுமாறு கணவர் காசிமிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிம்மு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட சிம்முவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகளுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அருணும், கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணனும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.