திருவாரூரில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

திருவாரூரில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

Update: 2017-12-16 22:30 GMT
திருவாரூர்,

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன், தெற்கு மாவட்ட செயலாளர் பாலு, மாவட்ட நிரவாகக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரபாகரன், மாநில மாணவரணி துணை செயலாளர் கார்த்தி, வன்னியர் சங்க மாநில துணை தலைவர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்