குற்ற தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

கந்தர்வகோட்டையில் குற்ற தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.

Update: 2017-12-16 22:30 GMT
கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை போலீசார் சார்பில் வார்த்தக வியாபாரிகள், வங்கியாளர்கள், நகைகடை உரிமையாளர்கள், நகை அடகுகடைஉரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட குற்றதடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வந்த அனைவரையும் கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் வரவேற்று பேசினார். சப்-இன்பெக்ஸ்டர்கள் பிரபு, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போலீஸ் நிலையத்தில் தகவல்

கூட்டத்தில் புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் எப்போதும் வீட்டின் கதவை பூட்டியே வைத்திருக்க வேண்டும். வீட்டைவிட்டு வெளியூர் செல்லும் பட்சத்தில் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து அதன் அருகிலேயே தூங்க கூடாது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெண்கள் தங்க நகைகளை அணிந்து தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வங்கி யாளர்கள், பொதுமக்கள், நகைகடை உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்