பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-12-16 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணை தலைவருமான தங்க.அய்யாசாமி தலைமை தாங்கினார். அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் துரையரசன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட இளைஞரணி நிர்வாகி மோகன், நகர செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சுரேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஒகி புயலில் சிக்கி இதுநாள் வரை மீட்கப்படாமல் உள்ள மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகி புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மேலும் செய்திகள்