மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பா.ம.க. மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் கிழக்கு கடலோர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மீனவர் சங்கம் சார்பில் புதுவை மீன்வளத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2017-12-16 22:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி மற்றும் விழுப்புரம் கிழக்கு கடலோர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மீனவர் சங்கம் சார்பில் புதுவை மீன்வளத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுவை மாநில பாட்டாளி மீனவர் சங்க தலைவர் உத்திராடம் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் சத்தியானந்தம், மீனவர் சங்க துணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புதுச்சேரி மாநில அமைப்பாளரும், முன்னாளம் எம்.பி.யுமான தன்ராஜ், துணை அமைப்பாளர்கள் கணபதி, மதியழகன், பொருளாளர் ஹீமா முனுசாமி, செயலாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இதில் ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை காப்பாற்ற தவறியதையும், புதுவை மீனவர்களுக்கு நிவாரணம் தொகை அறிவிக்க தவறிய மத்திய, மாநிலஅரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்