விவசாயிகள் நலன் கருதி மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் அணை கட்ட வேண்டும், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.கோரிக்கை
விவசாயிகள் நலன் கருதி மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் அணை கட்ட வேண்டும் என்று வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
திருக்கோவிலூர்,
ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் தென்பெண்ணையாறு உற்பத்தியாகி அங்கிருந்து தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. பின்னர் அங்கிருந்து விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு, மணலூர்பேட்டை, திருக்கோவிலூர், அரசூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வழியாக கடலூருக்கு சென்று கடலில் கலக்கிறது. சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும்போதெல்லாம் தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும். ஆனால் அந்த தண்ணீரை பல்வேறு இடங்களில் தேக்கி வைத்து விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் போதுமான அளவுக்கு அணைகள் கட்டப்படவில்லை. இதனால் தண்ணீரானது கடலில் சென்று கலந்து வீணாகி வருகிறது.
சமீபத்தில் கூட சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனால் உரிய அணை கட்டப்படாத காரணத்தால் சுமார் 7 டி.எம்.சி. தண்ணீர் யாருக்கும் பயனின்றி வீணாக கடலில் சென்று கலந்தது. திருக்கோவிலூர், எல்லீஸ்சத்திரம், சொர்ணாவூர் ஆகிய பகுதியில் உள்ள அணைக்கட்டுகள் மூலம் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டதன் மூலம் அந்த பகுதி விவசாயத்துக்கு அது தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் ரிஷிவந்தியம் பகுதியில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் அணை ஒன்றை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அணை கட்டப்பட்டால் ரிஷிவந்தியம் பகுதியில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் நிலை ஏற்படும். அதன் மூலம் விவசாயிகள் பயன் அடைவார்கள். எனவே விவசாயிகள் நலன் கருதி மணலூர்பேட்டை தென்பெண்ணையாற்றில் அணை கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.