தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசியா மணல் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல்
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசியா மணலை ஏற்றி வந்த 3 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மலேசியா மணலை ஏற்றி வந்த 3 லாரிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மலேசிய மணல்
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இயங்கி வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டதால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு நிறுவனம், மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு மணல் இறக்குமதி செய்தது. அந்த மணலை வெளியே கொண்டுவர தமிழக அரசு அனுமதி மறுத்தது. இதனால் அந்த நிறுவனம் மதுரை ஐகோர்ட்டில் முறையீடு செய்தது. இதையடுத்து ஐகோர்ட்டு மலேசியா மணலை விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை எதிர்த்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது
லாரிகள் பறிமுதல்
இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசியா மணலை ஏற்றி சென்ற 3 லாரிகளை, துறைமுகத்துக்கு வெளியே துறைமுக பைபாஸ் ரோட்டில் வைத்து வருவாய்த்துறை அதிகாரிகள் வழிமறித்து விசாரித்தனர். அப்போது உரிய அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்ததாக 3 லாரிகளையும் பறிமுதல் செய்து, தூத்துக்குடி தெர்மல்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.