வடலாவில் 9 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

மும்பை வடலா தீன்பந்தி நகர் குடிசை பகுதியை சேர்ந்தவர்கள் தெருவோரம் தங்களது மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி வைத்திருப்பது வழக்கம்.

Update: 2017-12-16 00:06 GMT

மும்பை,

மும்பை வடலா தீன்பந்தி நகர் குடிசை பகுதியை சேர்ந்தவர்கள் தெருவோரம் தங்களது மோட்டார்சைக்கிள்களை நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவும் வழக்கம்போல அங்கு மோட்டார்சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 9 மோட்டார்சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

இந்த சம்பவம் குறித்து மோட்டார்சைக்கிள் உரிமையாளர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதில், மர்மஆசாமிகள் யாரோ மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்