ராகுல்காந்தி பதவியேற்பில் பங்கேற்க நாராயணசாமி, அமைச்சர்கள் டெல்லி பயணம்

ராகுல்காந்தியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர். போட்டியின்றி தேர்வு காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில்

Update: 2017-12-15 23:03 GMT

புதுச்சேரி,

ராகுல்காந்தியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் டெல்லி சென்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல்காந்தி போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்கிறார்.

புதிய தலைவராக பொறுப்பேற்கும் ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவிக்க நாடு முழுவதும் இருந்து காங்கிரஸ் முதல்–அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் டெல்லி சென்றுள்ளனர்.

அதேபோல் புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமியும் டெல்லி சென்றுள்ளார். மேலும் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் டெல்லி சென்றுள்ளனர்.

அவர்கள் இன்று ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். அதன்பின் புதுச்சேரி திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்