திருப்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-12-15 22:00 GMT

திருப்பூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சத்தியன் முன்னிலைவகித்தார். கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு, பாராளுமன்ற தொகுதி செயலாளர் சண்முகம், திருப்பூர் மாவட்ட நெறியாளர் விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகவும் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வரும் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ராஜா உள்ளிட்டவர்களுக்கு கண்டனம் தெரிவித்தும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மதவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்