தீக்குச்சி தொழிற்சாலையில் ரூ.1 லட்சம் திருடிய கணக்காளர் கைது
கோவில்பட்டியில், தீக்குச்சி தொழிற்சாலையில் ரூ.1 லட்சத்தை திருடிய கணக்காளரை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில், தீக்குச்சி தொழிற்சாலையில் ரூ.1 லட்சத்தை திருடிய கணக்காளரை போலீசார் கைது செய்தனர்.
தீக்குச்சி தொழிற்சாலை
கோவில்பட்டி தொழிற்பேட்டையில் கணேசன் (வயது 65) என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தொழிற்சாலை உள்ளது. கடந்த 12–8–2017 அன்று தொழிற்சாலையில் உள்ள பீரோவில் ரூ.1 லட்சத்தை கணேசன் வைத்து பூட்டினார். பின்னர் அவர் சாவியை பீரோவின் மேற்பகுதியில் வைத்து சென்றார்.
ரூ.1லட்சம் திருட்டு
இந்த நிலையில் மறுநாள் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் திருடுபோனது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றிய எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையைச் சேர்ந்த சீனிவாசன் (48), பணம் திருடுபோன மறுநாளில் இருந்து பணிக்கு வரவில்லை. எனவே அவரை போலீசார் தேடி வந்தனர்.
கணக்காளர் கைது
நேற்று கோவில்பட்டி சண்முகா தியேட்டர் எதிரில் நின்ற சீனிவாசனை போலீசார் கைது செய்தனர். ரூ.1 லட்சத்தை திருடிய அவர், ரூ.25 ஆயிரத்தை செலவு செய்து விட்டார். அவரிடம் இருந்த ரூ.75 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை, 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட்டு ஜெயசுதாகர் உத்தரவிட்டார்.