6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை இந்தி ஆசிரியர் கைது

கல்பாக்கம் பள்ளியில் 6–ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை இந்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2017-12-14 23:59 GMT

கல்பாக்கம்,

நேற்று முன்தினம் 6–ம் வகுப்பில் சங்கர்ராவ் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது வகுப்பில் இருந்த மாணவ, மாணவிகளை வெளியே அனுப்பி விட்டு, குறிப்பிட்ட ஒரு மாணவிக்கு சங்கர்ராவ் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மாணவி இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதார்.

இதனையடுத்து மாணவியின் பெற்றோர் கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சங்கர்ராவை நேற்று கைது செய்து, செங்கல்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்