சட்டவிரோதமாக ரூ.2,000 கோடி இரும்பு தாது ஏற்றுமதி குமாரசாமி குற்றச்சாட்டு
ரூ.2,000 கோடி இரும்பு தாது சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக குமாரசாமி பரபரப்பு குற்றம்சாட்டினார்.
பெங்களூரு,
ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மைசூரு மினரல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள இரும்பு தாது சட்டவிரோதமாக ஏற்றுமதி ஆகியுள்ளது. இதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன். இதற்கு சித்தராமையா பதில் சொல்ல வேண்டி இருக்கும்.இவ்வாறு குமாரசாமி கூறினார்.