பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து: காயமடைந்தவருக்கு ரூ.ஒரு லட்சம் நிவாரணம்

வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பழுதடைந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்கும்போது அலுவலக கண்காணிப்பாளர் சிவபாரதி, காவலாளி அய்யனார் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஊழியர்கள் ராமன், மதிவாணன் ஆகியோர் படுகாயமடைந்த

Update: 2017-12-14 22:51 GMT

புதுச்சேரி,

வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பழுதடைந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை இடிக்கும்போது அலுவலக கண்காணிப்பாளர் சிவபாரதி, காவலாளி அய்யனார் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இந்த விபத்தில் ஊழியர்கள் ராமன், மதிவாணன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

பலியான 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என முதல்–அமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார். அதன்படி காயமடைந்த ராமன் குடும்பத்துக்கு சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்–அமைச்சர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ. ஒரு லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையை முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். அப்போது தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.

மேலும் செய்திகள்