தூத்துக்குடியில், ஒகி புயல் பேரிடர் மீட்பு போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில், காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை விரைவு படுத்த வலியுறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒகிபுயல் பேரிடர் மீட்பு போராட்டக்குழுவினர் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட ஒகி புயல் பேரிடர் மீட்பு போராட்டக்குழு சார்பில் நேற்று காலையில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். குழு ஒருங்கிணைப்பாளர் சார்க்கோஸ், திராவிடர் விடுதலைக்கழக பால்.பிரபாகரன், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க சுந்தரி மைந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒகி புயலால் இறந்த மீனவர்களின் உடலை உடனடியாக மீட்க வேண்டும், காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை விரைவுபடுத்த வேண்டும், கேரளா அரசை போன்று இறந்து போன ஒருவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், படகு, வலைகள் சேதம் அடைந்தவர்களுக்கு உரிய முழுநிவாரணம் வழங்க வேண்டும், கடலோர காவல்படையில் பணியாற்றுபவர்களுக்கு அந்த வட்டார மொழி தெரிந்து இருப்பது அவசியம் என்று உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மைதீன்கனி, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் யூசுப், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் அருந்ததிஅரசு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கெர்து மைதீன், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி, தமிழ்புலிகள் அமைப்பு கத்தார் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.