அரசு கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் வகுப்புகளை புறக்கணித்தனர்
கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் குடிநீர், கழிவறை, ஆய்வகம், ஓய்வறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் நேற்றுமுன்தினம் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக மாணவர்கள் அறிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் கல்லூரி பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என பேராசிரியர்கள் கூறினர். ஆனால் மாணவர்கள், அரசு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.