சேலத்தில் மேலும் 3 கொள்ளையர்கள் கைது பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
சேலத்தில் மேலும் 3 வடமாநில கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம்,
நாமக்கல்லில் வடமாநில கொள்ளையர்கள் 5 பேர் நேற்று காலை கைது செய்யப்பட்டனர். இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின்பேரில், வடமாநில கொள்ளையர்கள் பதுங்குவதற்காக வாகனங்களில் சேலத்துக்கு தப்பி வருகிறார்களா? என்று சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு, சேலம் தெற்கு சரக போலீஸ் உதவி கமிஷனர் அன்பு தலைமையில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியே வந்த பஸ்களில் நடுவழியில் யாரேனும் வடமாநிலத்தவர்கள் ஏறினார்களா? என்று டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகளிடம் போலீசார் விசாரித்தனர்.
மேலும் அந்த வழியாக ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட லாரி ஒன்று வேகமாக வந்தது. போலீசார் சந்தேகத்தின்பேரில் அந்த லாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது லாரியில் 4 இரும்பு ராடு, 2 பெரிய அளவிலான ஸ்குருடிரைவர் போன்ற ஆயுதங்கள் இருந்தன. லாரியில் வந்த 3 பேரையும் சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்தனர்.
சிறிது நேரத்தில் அந்த வழியாக வடமாநில பதிவெண் கொண்ட மற்றொரு லாரி வந்தது. லாரியில் இருந்த 3 பேரும் மிரட்சியுடன் விழித்து கொண்டிருந்தனர். இதனால், போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது. அதைத்தொடர்ந்து பிடிபட்ட வடமாநிலத்தவர்கள் 6 பேர் மற்றும் 2 லாரிகளையும் போலீசார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். வாகன சோதனை காரணமாக சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
போலீசாரிடம் பிடிபட்ட 6 பேரும் இந்தியில் பேசியதால், முறையாக விசாரிக்க முடியவில்லை. அதைத்தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார். அவருக்கு இந்தி நன்றாக தெரியும் என்பதால், அவரது முன்னிலையில் 6 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கோவை குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பாண்டியனும் விசாரணை நடத்தினார்.
அப்போது பிடிபட்டவர்களில் 3 பேர், கோவையில் கடந்த 9, 10-ந் தேதி தொடர்ச்சியாக நடந்த ஏ.டி.எம். கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
அவர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்த அமீன் (வயது 34), சுபேர் என்கிற சுரேஷ் (33), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மோசன் (34) ஆவர். மூவரையும் போலீசார் கைது செய்து கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களும், ஒரு லாரியும் பறிமுதல் செய்யப்பட்டன. அதாவது நாமக்கல்லில் பிடிபட்ட 5 கொள்ளையர்களுடன் ஒன்றாக வந்தபோது, 3 பேர் மட்டும் சேலத்தை நோக்கி லாரியில் தப்பி வந்தது தெரியவந்தது.
சேலத்தில் பிடிபட்ட மற்ற 3 பேருக்கும் ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்படவில்லை என்பதால், லாரியுடன் அவர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டனர்.