91 வயது சுதந்திர போராட்ட தியாகிக்கு 2 வாரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
91 வயது சுதந்திர போராட்ட தியாகிக்கு 2 வாரத்தில் பென்ஷன் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜுலு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எனக்கு தற்போது 91 வயது ஆகிறது. நாட்டின் சுதந்திரத்திற்காக நடந்த போராட்டத்தில் என்னுடைய 15-வது வயதில் பங்கேற்றேன். இதனால் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு 3.11.1942 முதல் 5.9.1943 வரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டேன். காங்கிரஸ் கட்சியின் 50-வது ஆண்டு விழாவையொட்டி ராஜீவ்காந்தி எனக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பினார்.
இந்தநிலையில் எனக்கு மாநில அரசின் தியாகி பென்ஷன் கேட்டு கடந்த 2013-ம் ஆண்டில் திண்டுக்கல் கலெக்டர், பொதுத்துறை இணை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தேன். சுதந்திர போராட்டத்தில் நான் பங்கெடுத்து ஜெயிலுக்கு சென்றபோது என்னுடன் இருந்த மாயாண்டிபாரதி, பெரியசாமி ஆகியோரும் சான்றிதழ் வழங்கியதை அந்த மனுவுடன் இணைத்திருந்தேன். ஆனால் எனது மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. தொடர்ந்து பலமுறை தியாகி பென்ஷன் கேட்டும் எந்த பலனும் இல்லை. எனவே எனக்கு தியாகி பென்ஷன் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
2 வாரத்தில் பென்ஷன்
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரர் மதிப்புமிக்க சேவையை நாட்டுக்கு அளித்துள்ளார். அவரது சேவை நீண்டகாலமாக அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் இருந்துள்ளது. தியாகி பென்ஷன் கேட்டு மனுதாரர் பலமுறை மனு அளித்தும் பலனில்லாததால் இந்த கோர்ட்டை நாடி உள்ளார். எனவே பென்ஷன் கோரி மனுதாரர் அளித்த மனுவின் பேரில் அவருக்கு 2 வாரத்தில் தியாகி பென்ஷன் வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.