வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்ல முயன்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு
வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்ல முயன்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் 3 மணி நேரம் போராடி போக்குவரத்தை சீர் செய்தனர்.
தாளவாடி,
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிக்கும்- தாளவாடிக்கும் இடையே திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. எனவே திம்பம் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்து 24 மணி நேரமும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் இந்த மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது ஆகும். இந்த வளைவுகள் மிகவும் குறுகலானவை.
நெல்லை, மதுரை, நாகர்கோவில் மற்றும் கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், சாம்ராஜ் நகர், பெங்களூருக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு இரவு நேரங்களில் வரும் கனரக வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை பண்ணாரி சோதனை சாவடியில் நிறுத்திவிட்டு பின்னர் காலையில் எழுந்து திம்பம் மலைப்பாதை வழியாக செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் வந்த ஏராளமான கனரக வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்தன. பின்னர் நேற்று காலை 6 மணி அளவில் அந்த கனரக வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்ல தொடங்கின. நேற்று திம்பம் மலைப்பாதையில் மூடுபனி நிலவியது. மலைப்பாதை என்பதுடன், மூடுபனி நிலவியதால் கனரக வாகனங்கள் அனைத்தும் நேற்று மெதுவாக ஊர்ந்து சென்றன. ஆனால் கார், வேன், சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்கள் அனைத்தும் கனரக வாகனங்களை முந்தி சென்றன.
இதுபோன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்ல முயன்றதால் திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவுகளில் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமப்பட்டன. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மலையின் மேல் பகுதியில் இருந்து இறங்கும் வாகனங்கள் ஒரு வரிசையாகவும், மலையின் கீழ் பகுதியில் இருந்து ஏறும் வாகனங்கள் மற்றொரு வரிசையாகவும் செல்ல ஏற்பாடு செய்தனர். காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை 3 மணி நேரம் போராடி போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் எந்தவித சிரமுமின்றி சென்றன. இந்த சம்பவத்தால் திம்பம் மலைப்பாதை வழியாக பஸ்சில் சென்ற பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.