புதுக்கோட்டையில் குற்ற தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டையில் குற்ற தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் நடந்தது.;

Update: 2017-12-13 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தின் சார்பில் குற்ற தடுப்பு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமை தாங்கினார். டவுன் இன்ஸ்பெக்டர் வாசுதேவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்கான ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இதில் வங்கி மற்றும் நகை கடைகளில் திருட்டை தடுப்பதற்கான அலாரத்தை அடிக்கடி சோதனை செய்து பராமரிக்க வேண்டும். கடை மற்றும் வங்கிகளில் பொறுத்தப்பட்டுள்ள ரகசிய கேமராக்களை சரி செய்ய வேண்டும். இரவு நேரங்களில் அந்த கேமராக்களை நிறுத்தாமல் வைக்க வேண்டும். நகைக் கடைகளில் வேலைக்கு வரும் நபர்களின் முழு தகவல்களையும்சேகரித்து வைத்திருக்க வேண்டும்.

அறிவுறுத்தப்பட்டது

வங்கி மற்றும் அடகு கடைகளில் அடமானம் வைக்க வரும் நபர்களின் ஆவணங்களை முழுமையாக பெற வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் திருட்டுகளை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விவேக், பூர்விகா, வங்கி அதிகாரிகள், நகைக்கடை மற்றும் அடகு கடை உரிமையாளர்கள், வங்கி மேலாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்