3 கன்று குட்டிகளை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
பேரணாம்பட்டு அருகே 3 கன்று குட்டிகளை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;
பேரணாம்பட்டு,
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வனப்பகுதியில் யானை, சிறுத்தைப்புலி நடமாட்டம் இருந்து வருகிறது. பேரணாம்பட்டு அருகே உள்ள அத்திகுப்பம் கிராமத்திற்குள் ஒரு சிறுத்தைபுலி நேற்று முன்தினம் இரவு புகுந்தது. அங்கு பிரபு என்கிற விவசாயிக்கு சொந்தமான நிலம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. அங்கு 2 வயதுள்ள கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது.
பின்னர் ஊர் பகுதியை ஒட்டியுள்ள ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் 1½ வயது கன்று குட்டியையும், விஜயரங்கன் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டைகையில் இருந்த 6 மாத கன்று குட்டியையும் அடித்து கொன்றது.
நேற்று காலை கன்று குட்டிகள் இறந்து கிடப்பதை பார்த்து அச்சமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விந்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.
வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தி, வனப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் வனப்பகுதிக்குள் மேய்சலுக்கு கால்நடைகளை ஓட்டி செல்லவோ, விறகு எடுக்கவோ செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.