தேன்கனிக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேன்கனிக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-12-13 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் பணிபுரியும் தாசில்தார் சிவசம்போ, மண்டல துணை தாசில்தார் மாணிக்கவாசகம் ஆகியோரையும், கிராம ஊழியர்களையும் பழி வாங்கும் நோக்கத்தில் பணிபுரியும் அதிகாரிகளை கண்டித்து தேன்கனிக்கோட்டை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் சூடப்பன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கிருஷ்ணன், துணை செயலாளர் அஜ்மத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் முனிமாரப்பன் வரவேற்றார். இதில் வேடியப்பன், ஜார்ஜ், நல்லகவுண்டன், சின்னசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

மேலும் செய்திகள்