200 பவுன் நகைகள் கொள்ளை: கண்காணிப்பு கேமராவில் பதிவான 4 வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை
பழக்கடை அதிபர் வீட்டில் 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான 4 வாலிபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை,
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பெருமாள் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லப்பா. இவர் சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் பழக்கடை நடத்தி வருகிறார். இவருடைய இளைய மகன் தங்கத்துரை. இவர் நெல்லையில் உள்ள பழக்கடைகளை கவனித்து வருகிறார். தங்கத்துரையின் மனைவி காந்திமதி(வயது 35).
நேற்று முன்தினம் மாலையில் காந்திமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம மனிதர்கள், காந்திமதியை அரிவாளால் வெட்டினர். பின்னர் அவருடைய வாயில் துணியை அமுக்கி பீரோக்களில் இருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 200 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்து நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயசீலன், உதயசூரியன், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் மர்ம மனிதர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொள்ளை நடந்த வீடு அமைந்துள்ள தெருவில் உள்ள பல்வேறு வீடுகளிலும், கடைகளிலும் கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 2 கேமராக்களில் பழக்கடை அதிபர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்து விட்டு மர்ம மனிதர்கள் 4 பேர் செல்வது தெளிவாக பதிவாகி உள்ளது.
இந்த கொள்ளையில் 4 வாலிபர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அந்த தெருவில் யாரும் வருகிறார்களா? என்று சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டே வருகிறார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வருகிறார்கள். அவர்களில் 2 பேர் மட்டுமே இறங்கி தங்கத்துரை வீட்டிற்கு செல்கிறார்கள்.
ஒரு வாலிபர் மட்டும் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் அமர்ந்து இருக்கிறார். சிறிது நேரம் கழித்து உள்ளே சென்ற 2 பேரும் வந்து மோட்டார் சைக்கிளில் ஏறுகிறார்கள். பின்னர் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். மற்றொரு வாலிபரும் தான் வந்த மோட்டார் சைக்கிளில் செல்கிறார். இந்த காட்சிகள் அணைத்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம மனிதர்கள் யார்? அவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு பிடித்து விட்டதாகவும் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.