கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கடலூர் மாவட்டம் சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2017-12-13 22:00 GMT

கடலூர்,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் கடலூர் மாவட்டம் சார்பில் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலாளர் திருமாவளவன் வரவேற்றார். மாநில துணை தலைவர் செந்தில்நாதன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மீண்டும் ஒரு நிலவரித்திட்ட பணியை தொடங்க வேண்டும், வருவாய்துறையில் வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தை உருவாக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே குடியிருக்க வேண்டும் என்ற விதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை தலைவர் அய்யப்பன், ஆலோசகர்கள் சையது இப்ராகிம், பட்டாபிராமன், மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கமல்ராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்