ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது வைகோ பேட்டி
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு எங்களுக்கு இருந்தாலும், உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுபோன்ற ஆணவ படுகொலைக்கு இந்த தீர்ப்பு எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோர் விவகாரத்தில் தமிழக அரசு ஏற்கனவே முன்மொழிந்தது போல அவர்களை விடுவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். ஆர்.கே.நகரில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.