பெண்ணை அடித்து கொன்ற விவசாயிக்கு அரிவாள் வெட்டு

தேவதானப்பட்டி அருகே உள்ள எ.காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல் விவசாயி.

Update: 2017-12-13 21:15 GMT

தேவதானப்பட்டி,

தேவதானப்பட்டி அருகே உள்ள எ.காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 50). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விவசாயி செல்வத்துக்கும் அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2016–ம் ஆண்டில் பழனிவேல் மனைவி பொன்னுத்தாயை செல்வம் அடித்து கொலை செய்தார்.

இந்தநிலையில் தேவதானப்பட்டி வேல்நகரில் உள்ள தனது தோட்டத்துக்கு செல்வம் நேற்று முன்தினம் சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த பழனிவேல், அவருடைய மகன்கள் ஆறுமுகம் (28), பாலமுருகன் (30) ஆகியோர் செல்வத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த செல்வத்துக்கு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிவேல், ஆறுமுகம், பாலமுருகன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்